கம்பளியை கடக்க முயலும் குளிர்...
சோம்பல் முறித்து எழுகையில்
சில்லென்று முகத்தில் அடித்து
பயிர்களின் உயிர் வாசத்தை
சுவாசத்தில் கலந்துவிட்டுப் போகும்
குளிர் காற்று....
பிள்ளையாருக்கு பரங்கிப்பூ
கோபுரம் கட்டிய
சகோதரியின் கோலம்...
பணிவோடு மலர்ந்து சிரிக்கும்
மர'மல்லி'
மஞ்சள்..சிகப்பு...
ஒற்றையடுக்கு...
இரட்டையடுக்கு...
என பூக்களைத் தாங்கி
வீட்டை சுற்றி
நளினமாய் நடனமாடும்
பூச்செடிகள்....
பார்வையின் எல்லைவரை
புத்தியில் போதையேற்றும்
பச்சைப் பசேல் பயிர்கூட்டம்...
பளபளன்னு விடியும்போது
பல்வேறு கதைகள் பேசி
பல திசையில் பணிக்கு செல்லும் எம்மக்களை
புத்தியில் புதிதாய் தோன்றச்செய்யும்
மென்கதிர்ச் சூரியன்....
வடுகைய்யரின் கைவண்ண
அம்மன் கோவில் பிரசாதம்....
இன்னும் ஏராள சுகங்கள் தரும் மார்கழி...
நினைக்கும் போதே கோடையிலும் குளிரடிக்கும்
மார்கழி....
எனக்குப்பிடித்த மார்கழி........

No comments:
Post a Comment