Thursday, February 17, 2011

தவறும்- மன்னிப்பும்


இன்று காலை சுமார் 8 :30  மணிக்கு ஈரோடு அருகிலுள்ள SPP  காலனி என்ற
இடத்தில் பள்ளி பேருந்து ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில்
6  குழந்தைகள் பலியானதாக சற்று முன்பாக  எனக்கு தகவல் கிடைத்தது...

இந்த காலைப்பொழுதில் மனதில் எவ்வளவு உற்சாகத்தோடு(பள்ளி செல்லும் அனுபவம் என்பது உற்சாகமானதாக உள்ளதா  என்பதும் கேள்விக்குரியதுதான்)  தன் தாய், தந்தையரிடம் மற்றும் சகோதர சகோதரிகளிடம் அவர்கள் விடைபெற்று  சென்றிருப்பார்கள். பேருந்தில் சக நண்பர்களோடு இந்த நாளை அவர்கள் எப்படி துவங்கியிருப்பார்கள்...எத்தனை   கேலிகள்...விளையாட்டுக்கள் நிகழ்ந்திருக்கும்...ஐயோ....அனைத்தும் ஒரு நொடியினில்  முடிந்து போய்விட்டதே....

இப்போது அவர்களைபெற்றவர்கள் எப்படிப்பட்ட நிலையில்  இருப்பார்கள்?
 தன்  அருமை நண்பர்களை  ரத்தமும் சதையுமான  உடல்களாக  பார்த்தபொது அந்த மாணவர்களின்  உள்ளம் எவ்வளவு பாதிப்படைந்திருக்கும்....
இவற்றிர்க்கெல்லாம் மேலாக இந்த இளம் வயதில்...மனதில் ஆயிரம் ஆசைகளோடும் கனவுகளோடும்  துள்ளித்திரிந்து கொண்டிருந்த அந்த குழந்தைகளின் உயிர் இப்போது என்ன நிலையில் இருக்கும்...இந்து மதம் நிறைய சொல்கிறதே இதை பற்றி...

இது அவர்கள்  வாழ்க்கை பயணத்தில் ஏற்ப்பட்ட தடையா...
இல்லை அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட பயண எல்லையே இவ்வளவுதானா என்று தெரியவில்லை...
ஆனால் இதை இன்று இப்படி பார்ப்பதற்கு முன்னாள் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்...
மனதில் தெளிவும், நிதானமும் இல்லாத ஒரு  ஓட்டுனரின்  தவறுதான் இது. இதைப்போன்ற  நிகழ்வுகளின் பின்னணியை...அதற்க்கான காரணத்தை இந்த முட்டாள்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள்களின் அரசு எப்படி கையாள்கிறது...?

எனக்கு "ஆத்மா" வைப்பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது...அப்படி ஒன்று இருந்து அந்த உயிர்கள் ஏதாவது பாதிப்பில் இருந்தால் நமது  அன்பின் கண்ணீர் அவர்களுக்கு ஆறுதாலக அமையட்டும்.

அனைவரும் மனதார பிரார்த்திப்போம் அவர்களை நாம் பெற்ற பிள்ளைகளாக பாவித்து...

இந்த உலகில் உள்ள கடவுளர்கள்  எல்லாம் அவர்களது உதவிக்கு வரட்டும்...

 ---------------------

ஒரு பெரும் தவறு நிகழ்ந்து விட்டது....நண்பர்கள் மன்னிக்கவும்...

by Bala Krishna on Thursday, February 17, 2011 at 3:00PM

( அவர்கள் இறக்கவில்லை )

இன்று காலை ஈரோடு SPP காலனி அருகே நிகழ்ந்த ஒரு விபத்தைப்பற்றிய செய்தியை பதிவு செய்திருந்தேன்...

அந்த விபத்து நடந்தவுன் அவ்வழியில் மற்றொரு பேருந்தில் பயணம் செய்த என் நண்பர் ஒருவர் மூலமாக இந்த அதிர்ச்சியான தகவல் எனக்கு கிடைத்தது. அதை கேட்டு மனம் தாளாமல் நான் அதை பதிவு செய்த சிறிது நேரத்திலேயே நமது முகநூல் நண்பர்களிடையே அத்தகவல் தீயாக பரவி உலகம் முழுவதும் இருந்தும் வருத்தங்கள் பதிவு செய்யப்பட்டது.

சற்று நேரத்திற்கு முன்பு அந்த தகவலைப்பற்றி மீண்டும் அங்குள்ள நண்பர்களிடையே விசாரித்ததில் அந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்ப்படவில்லை....12 மாணவர்கள் மட்டும் காயமடைந்துள்ளார்கள் என்றும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிய வந்தது. இதைக்கேட்டவுடன் என் மனம் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தது... இந்த செய்தியை எனது தவறான தகவலால் மனம் வாடிய என் நண்பர்களுக்கும் தெரிந்தால் என் தவற்றை மன்னித்து மனம் மகிழ்வார்கள் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்...

இதன் மூலம் இந்த முகநூளில் எழுதுவது என்பது பத்திரிக்கையில் செய்தி வெளியிடுவதை விட கவனமாக செய்யப்பட வேண்டிய செயல் என்பதை அனுபவ பூர்வமாக புரிந்துகொண்டேன். எனது இந்த அனுபவம் என் நட்ப்புக்களுக்கும் நல்ல பாடமாக அமையும் என்று நம்புகிறேன்.

நண்பர்களிடையே மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...

No comments:

Post a Comment