Wednesday, February 16, 2011

காதல் பயணம்


காதலர்தினம் இனிதே கொண்டாடப் பட்டுவிட்டது ,
பல இதயங்கள் உள்ள கிளர்ச்சியோடு
தங்கள் காதலை வெளிப்படுத்தின,
சிலருக்கு வெற்றி,
சிலருக்கு தோல்வி,
ஆனால் இருவருக்கும் கண்ணீர்.
தாங்கொணாத சந்தோஷத்தில் ஒருவர்க்கும்,
துயரத்தில் மற்றவருக்கும்.
காலத்தின் பயணம் தொடர்கிறது...
இதில் எவ்வளவு காதல் - உயிரின்
சுதந்திரத்திர்க்கான பாதையிலும்,
உயிர்ப்பிற்கு ஊழ்வினை செய்யும் அடிமைப்பாதையிலும்,
செல்கின்றன என்பதை - அந்த
காலமே அறியும்.

(காதல் பாலின எல்லை தாண்டியும் பரவட்டும்.)

- பாலா.

No comments:

Post a Comment